Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by farook press in ,    
உடுமலையை அடுத்த புங்கமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னபொம்மன் சாளை தொடக்கப்பள்ளியில் தூய்மையான பாரதம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த 14–ந் தேதி முதல் 20–ந்தேதி வரை பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்துதல், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், சுத்தமான கழிப்பிடம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தூய்மையான பாரதம் திட்டத்தின் முக்கிய அம்சமாக காற்றை சுத்தப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் மெஹராஜ்பாத்திமா தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்து மரக்கன்றுகளை நட்டார்.
நிகழ்ச்சியின் போது மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் மழைநீர் சேமிப்போம் மனித வளம் காப்போம் உள்ளிட்ட கோஷங்களை மாணவ–மாணவிகள் எழுப்பினர். நிகழ்ச்சியில் உதவியாசிரியர் பெருமாள், அங்கன்வாடி பணியாளர் வத்சலா மற்றும் மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: