Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
அரசு மருத்துவமனையில் கழிவறை இடிப்பு : நோயாளிகளின் உறவினர்கள் தவிப்பு                            கரூர் அரசு மருத்துவமனையில், ஆண்களுக்கான கழிப்பறை இடிக்கப்பட்டதால், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனை நகரின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து, சிகிச்சை பெற்று செல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் வெளி நோயாளியாக வருபவர்கள் பயன்படுத்த பிரேத பரிசோதனை அருகே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே கழிவறை இருந்தது. மருத்துவமனை போலீஸாருக்கு என்று தனியே கழிவறை இருந்தது. கரூர் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பலர் கூடுவதால் அருகே அமைந்துள்ள கழிவறை பயன்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென, இரண்டு நாட்களுக்கு முன் ஆண்கள் கழிவறை மற்றும் போலீஸார் பயன்படுத்தும் கழிவறை திடீரென இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்நோயாளிகளை பார்க்க வருபவர்களும், வெளி நோயாளிகளும் கழிவறை இன்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து, கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் கூறியதாவது:
நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், கரூர் அரசு மருத்துவமனை வந்து செல்கின்றனர். ஆண்களுக்கு, என இருந்த பொதுக்கழிப்பிடத்தை திடீரென இடித்து விட்டனர். இதனால், பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் பலர் கழிவறை இல்லாததால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவறை இடிக்கும் முன், மாற்று ஏற்பாடாக ஆண்கள் கழிவறைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். உடனடியாக, அதே இடத்தில் மீண்டும் கழிவறை கட்டித்தரப்பட வேண்டும். இதற்கு உடனடியாக, கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து கரூர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:
கரூர் அரசு மருத்துவமனையில், இடிக்கப்பட்ட ஆண்கள் கழிவறை இடத்தில் யோகா மற்றும் இயற்கை வாழ்க்கை முறை சிகிச்சை அளிக்க கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்காக, தனியே டாக்டர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்குள் இப்பணிகள் முடிவடையும். பிரேத பரிசோதனைக்கு வரும் உறவினர்கள் தங்குவதற்கும் சேர்த்து, மொத்தம், 30 லட்சம் செலவில் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கரூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான பொதுக்கழிப்பிடம் இல்லாததால் பெரிதும் பரிதவித்து வருகின்றனர். இதற்கு தற்காலிகமாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும், என்பதே அனைவரின் கோரிக்கை. 

0 comments: