Monday, November 03, 2014
வாக்காளர் பெயர் சேர்ப்பு கரூர் கலெக்டர் அதிரடி
கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை பார்வையிட்ட கலெக்டர் ஜெயந்தி, கம்ப்யூட்டர் மூலம், புதிய வாக்காளரை பதிவு செய்தார்.
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மண்மங்கலம் தாலுக்கா மண்மங்கலம் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி, கரூர் தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை, கலெக்டர் ஜெயந்தி பார்வையிட்டார். கம்ப்யூட்டர் மூலம் தேர்தல் கமிஷன் இணைய தளத்தில் (ஆன்லைன்) பதிவு செய்யப்படுவதையும், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் பதிவுகளை சரியான முறையிலும், விரைவாக செய்யுமாறு உத்தரவிட்டார். தாந்தோணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், புதிய வாக்காளர் ஒருவரின் விண்ணப்பதை பெற்று, கலெக்டர் ஜெயந்தி, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தார். கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், கரூர் தாசில்தார் மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக...
-
முசிறி, தொட்டியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - எம்.எல்.ஏ செல்வராஜ் வழங்கினார் திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தொட...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
-
அம்மான், விமானி கொலைக்கு பழி வாங்கும் விதமாக பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை ஜோர்டான் தூக்கில் போட்டது. இந்நிலையில் பெண் தீவிரவாதியை கொன்றது ...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
படித்துறை அங்காளம்மன் கோவிலில் ராகு தோஷ நிவர்த்தி பிரதிஷ்டை திருச்சி குடமுருட்டி பாலம் அருகே அமைந்துள்ள அய்யாளம்மன் கோயிலின் அருகே காவேரி...
0 comments:
Post a Comment