Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
போலீஸ் குடும்பத்தினர் குற்றச்சாட்டு ரேஷன் பொருட்கள்                                                                                                                              போலீஸாரின் குடும்பத்தினருக்கு, மானிய விலையில் வழங்கும் ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை,'' என்று போலீஸார் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுவதும், 1.20 லட்சம் போலீஸார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், தனியே ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, ரேஷன் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் வசிக்கும் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு ரேஷனில் சரியாக பொருட்கள் வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, கரூரில் பணிபுரியும் போலீஸார் கூறியதாவது:
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சரிவர கிடைப்பதில்லை. உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை எப்போதாவது தான் தருகின்றனர். எங்களுக்கு மாதக் கடையில், 23ம் தேதி முதல், 25ம் தேதி வரை தான் ரேஷன் பொருட்கள் வழங்குகின்றனர். இது குறித்து ரேஷன் கடைக்காரரிடம் கேட்டால், போலீஸார் குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட பொருட்கள், இன்னும் வந்து சேரவில்லை, என்று கூறுகின்றனர். கோதுமை சுத்தமாக கொடுப்பதே இல்லை.
இதனால், போலீஸாரின் குடும்பத்தினர் பரிதவிப்பில் உள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இது குறித்து கரூர் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விக்னேஷ்வரன் கூறியதாவது:
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன் பின், மற்றவர்களுக்கு வழங்கி வருகிறோம். மாதக்கடைசியில் பொருட்கள் வழங்கப்படுவது, என்று போலீஸார் கூறுவது போல் இல்லை. ஸ்டாக் இருந்தால், அனைவருக்கும் கொடுக்கப்படும். போலீஸாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு இருந்தால், சம்மந்தப்பட்ட போலீஸ் உயரதிகாரிகள் மூலம் தெரிவிக்கலாம். உடன் நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்றால், அந்த கடைகளை குறிப்பிட்டு, புகார் வந்தால் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜோசி நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று போலீஸார் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

0 comments: