Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றத்தில் டீசலுக்காக வரிசையில் நின்ற அரசு பஸ்கள்: பொதுமக்கள் அவதி
திருமங்கலம் அரசு பஸ் டிப்போவில் சுமார் 105 பஸ்கள் இயங்குகின்றன. இவற்றின் மூலமே அருகில் உள்ள கிராமப்பகுதிகளான கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பள்ளிகள், அலுவலகங்களுக்கு திருமங்கலம் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் அரசு பஸ் டிப்போவில் டீசல் இல்லை என்பதால் நேற்று காலை முதலே திருப்பரங்குன்றம் பணிமனையில் டீசல் பிடிக்க அரசு பஸ்கள் வரிசைகட்டி நின்றன. இதனால் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பல கிராமப்புற பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு காலை நேரம் பஸ்கள் செல்லாததால் கிராமப்புறத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவியர் பெரும் அவதியுற்றனர். அவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
இது போன்ற டீசல் இல்லாத நிலை அரசு பேருந்து பணிமனைகளில் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

0 comments: