Monday, November 03, 2014

On Monday, November 03, 2014 by Unknown in ,    
அரசு அனுமதித்தபின் கிரானைட் முறைகேடு விசாரணை தொடங்கப்படும்: கலெக்டர் தகவல்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவித் தொகையை வழங்குவதற்காக கலெக்டர் சுப்பிரமணியம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். கொட்டாம்பட்டி அருகேயுள்ள மணப்பச்சேரியை சேர்ந்த விவசாயி ராசுவுக்கு சொந்தமான மாடு மின்னல் தாக்கி இறந்தது. இதற்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும், மழையால் வீடுகள் சேதம் அடைந்த ஆறுமுகம், ஆரம்மாள் ஆகியோருக்கு தலா ரூ.2500 காசோலையும் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் விசாரணை குறித்து கலெக்டர் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, தமிழக அரசு அனுமதி கிடைத்ததும் சகாயம் விசாரணை தொடங்கும் என்றார்.
இந்த நிலையில் கலெக்டர் சுப்பிரமணியன் கிரானைட் வழக்குகள் குறித்து செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை கிழக்கு வட்டம் திருமோகூர் கிராமங்களில் உரிய அனுமதியின்றி பட்டா இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்துண்டுகளை அரசு உடமையாக்கும் வகையில் பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் அதன் பங்குதாரர்களான பி.பழனிச்சாமி (வயது63), ப.செல்வி (44), சுரேஷ்குமார் உள்பட 8 பேர் மீது மொத்தம் 6 வழக்குகளும், மேலூர் வட்டம் திருவாதவூர் கீழையூர் மற்றும் நாவினிப்பட்டி கிராமத்தில் பட்டா நிலங்களில் உரிய அனுமதியின்றி கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பி.கே.செல்வராஜ், ராம்ஸ் எக்ஸ்போர்ட், பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி.எக்ஸ்போர்ட், ஸ்ரீமீனாட்சி எக்ஸ்போர்ட் ஆகிய நிறுவனத்தை சேர்ந்த தெய்வேந்திரன், பழனிச்சாமி, கார்த்திகேயன், வெங்கட்ராமன் ஆகியோர் மீது 14 வழக்குகள் உள்பட மொத்தம் 20 வழக்குகள் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 comments: