Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

   

எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ரூ24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதியாம்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், எழுதியாம்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செக்கணத்தில் எம்பி தொகுதி நிதியின் கீழ் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய சமுதாய கூடம், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி பாம்பரத்தான்பட்டியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகிய அரசு கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். திருக்காம்புலியூர் ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், முத்துரெங்கம்பட்டி ஊராட்சி தலைவர் கல்யாணி, ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டிடங்களை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ காமராஜ் திறந்து வைத்து பேசினார். தொகுதி இணை செயலாளர் ராஜா, ஒன்றிய பேரவை செயலாளர் மணவாசி வீரமணி, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய மேற்பார்வையாளர் விமலா, கண்காணிப்பாளர் ரேணுகா, கிளை செயலாளர்கள் பெருமாள், மலையாளன், குணா, குமரவேல், ஊர் நாட்டாண்மை கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: