Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

வரவணை பகுதியில் குவாரியில் வெடித்த கற்கள் விவசாய நிலத்தில் விழுந்தது குளித்தலை ஆர்டிஓ ஆய்வு                   கடவூர் தாலுகா வரவணை பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து கல் பறந்து விவசாய நிலத்தில் விழுந்ததால் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். 

கடவூர் தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வரவணை ஊராட்சியில் அதிக படியான குவாரிகள் உரிய அனுமதியோடும் மற்றும் அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் வரவணை அருகில் உள்ள தனியார் கல் குவாரியில் திடீர் என்று நில அதிர்வு போன்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. பின்னர் அதில் இருந்து பறந்த கற்கள் விவசாய பகுதியில் போய் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என குவாரியை முற்றுகையிட்டனர். 
அதன் பின்னர் நேற்று குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர் சித்திரைராஜ், மாவட்ட கனிம வள சுரங்கத்துறை  புள்ளியியல்  உதவி இயக்குனர் ஜெயபால், கடவூர் தாசில்தார் துரையரசன் ஆகியோர் குவாரியை ஆய்வு செய்தனர். இதில் அருகருகே உள்ள மூன்று குவாரிகளை ஆய்வு செய்தனர். 
பின்னர் உரிய ஆவணங்கள் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.

 மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கலெக்டர் பார்வைக்கு அனுப்பப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர்  அப்பகுதி மக்கள் புகார் மனு ஒன்றையும் குளித்தலை கோட்ட வருவாய் அலுவலர்  சித்திரைராஜிடம் வழங்கினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.     

0 comments: