Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
உசிலம்பட்டி அருகே குருவிலாம்பட்டியை சேர்ந்த லிங்கம் மனைவி அமுதா (வயது40). இவர், நல்லுத்தேவன் பட்டியில் குருநாதன் என்பவர் நடத்தும் அறக்கட்டளை நிறுவனத்திற்கு ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
அறக்கட்டளை சார்பில் அமுதா, அந்த பகுதி பொதுமக்களிடம் மாதந்தோறும் ரூ.12,500 கட்டினால் வங்கி மூலம் 5 லட்ச ரூபாய் கடன் பெற்றுத்தருவதாக கூறி 125 பேரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார்.
பணம் கொடுத்தவர்கள் அமுதாவை நெருக்கவே, அவர் குருநாதனிடம் பணத்தை கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமுதாவை, குருநாதன் தாக்கினார். காயமடைந்த அமுதா, உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அமுதா உசிலம்பட்டி போலீசில் அறக்கட்டளை நிர்வாகி மீது பண மோசடி செய்ததாக புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 comments: