Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம்: தலைமை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவுமதுரை கோ.புதூரை சேர்ந்தவர் எஸ்.கருணாநிதி, வக்கீல். மதுரை வக்கீல்கள் சங்க துணைச்செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருந்ததாவது:–
ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜகோபால் ஆச்சாரி, தந்தை பெரியார், அம்பேத்கார், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரின் உருவப்படங்களை மட்டும் அரசு அலுவலகங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு புறம்பாக அரசு அலுவலங்களில் ஜெயலலிதா உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவியில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் அவரது உருவப்படங்களை அரசு அலுவலங்களில் வைத்து இருப்பது நியாயமற்றது.
எனவே, அரசு திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகளில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்களை நீக்கவும், அரசு அலுவலங்களில் ஜெயலலிதா படத்தை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலு மணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், வி.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்

0 comments: