Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை பெரியாற்றில் தண்ணீர் 142 அடியை எட்டியதற்கு ஐந்து மாவட்ட மக்கள் பென்னி குயிக்கிற்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகர அ.தி.மு.க.வினர், முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நேற்று மதுரையில் பொது கூட்டம் நடத்தினர்.அந்த கூட்டத்தில், அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும்போது, ''இன்று தென்மாவட்ட மக்கள் மகிழும் வகையில் முல்லைப்பெரியாற்றின் நீர் வைகையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் ஜெயலலிதாதான். கருணாநிதி இந்தப் பிரச்னைக்காக துரும்பைகூட எடுத்து போடவில்லை. ஆனால், இப்போதோ கேரளாவுக்கு நன்மை செய்வது போல அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார்.
மக்களின் முதல்வர் என்று ஜெயலலிதாவை நாங்கள் குறிப்பிடுவதை சில ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன. மக்கள்தான் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தவர்கள். ஜெயலலிதா  5 ஆண்டுகள் ஆட்சி செய்ய  வேண்டுமென்றுதான் மக்கள் அதிகாரத்தை வழங்கினார்கள். இப்போது ஜெயலலிதாவை பதவியிலிருந்து இறக்கியது மக்களா? மக்கள் கொடுத்த அதிகாரம் இன்னும் ஒன்றரை வருடத்திற்கு உள்ளது.அப்படி என்றால், ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்வதில் என்ன தவறு? நான் சட்டத்திற்குள் செல்லவில்லை. மக்களின் முதல்வர் என்று சொல்வதை, கிண்டல் செய்ததற்காக இதை சொல்கிறேன்" என்றார். தொடர்ந்து தமிழக மீனவர் பிரச்சனையில் பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வட நாட்டில் இருந்து வந்து தற்போது மத்தியில் ஆட்சியை பிடித்த கட்சியெல்லாம் மக்கள் செல்வாக்கு இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி வருகின்றனர்.ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை அவை லெட்டர் பேடு கட்சியாகத்தான் உள்ளது என சாடினார் . அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, ''ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் மாபெரும் கூட்டத்தை நடத்தினார்கள். இது நாம் நடத்தும் நன்றி கூட்டம். தாய்க்கு பிள்ளைகள் எடுக்கும் விழா" என்றார். மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பின்னப்பட்ட சூழ்ச்சிகளை முறியடித்து தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பார் என தெரிவித்தார்
Displaying NEWS 2 ADMK.JPG

0 comments: