Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
Displaying DSC_1178.JPGDisplaying DSC_1177.JPGDisplaying DSC_1176.JPGமதுரை வண்டியூர் அப்துல் கலாம் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மனைவி பாண்டியம்மாள்தேவி (வயது40). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் பாண்டியம்மாள்தேவி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பாண்டியம்மாள்தேவி வந்தார். அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுக்க ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் பாண்டியம்மாள்தேவி, தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்தார். தீ மளமளவென உடலில் பரவியது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து காப்பாற்றினர். ஆனால் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. உடனே ஆம்புலன்சு மூலம் பாண்டியம்மாள்தேவி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் தீக்குளித்த பாண்டியம்மாள் தேவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:–மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரியும் முத்துநகை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் வேலை பார்க்கும் வேட்டைச் செல்வம் ஆகியோர் எனக்கு நர்சு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு செலவாகும் என்றும் கூறினர்.இதனை நம்பி நான் ரூ.9 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்டு நீண்ட நாட்களாகியும் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.இதுதொடர்பாக அப்போது கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்புதான் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.முத்துநகை, வேட்டைச் செல்வம் ஆகியோரை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்தினேன். இந்த நிலையில் 2 பேரும் தொடர்ந்து என்னை மிரட்டி வருகிறார்கள். மேலும் என் வீட்டையும் சேதப்படுத்தினர்.இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எந்தவிமான நடவடிக்கைகளும் அவர்கள் மீது எடுக்கவில்லை. எனவே அவர்களை கைது செய்யக்கோரியும், எனது பணம் ரூ. 9 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தீக்குளித்தேன் என கூறினார்

0 comments: