Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
மதுரையில் இன்று மாலை ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: டாக்டர் சரவணன் அறிக்கைமதுரையில் இன்று மாலையில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுளள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு காளவாசலில் உள்ள தாய் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் சாமி தலைமை தாங்குகிறார்.
இதில் புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments: