Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
கடன் தொகையை செலுத்தாததால் பி.ஆர்.பி. கிரானைட் சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கைமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011–ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. மேலூர் பகுதிகளில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளிலும் சோதனை நடத்தியதின் அடிப்படையில் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த முறைகேடுகள் தொடர்பாக 77 வழக்குகளை மதுரை கலெக்டர் மேலூர் கோர்ட்டில் நேரடியாக தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகளில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தின் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனங்களுக்கு அரசு ‘சீல்’ வைத்ததால் வர்த்தகமும் முற்றிலும் முடங்கின.
இதனிடையே மதுரையில் உள்ள இந்தியன் பாங்கியில் பி.ஆர்.பி. கிரானைட் மற்றும் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் அடமான கடன் வாங்கியதில் ரூ.149 கோடியை முறையாக திருப்பி செலுத்தவில்லை. எனவே அதற்குரிய அடமானம் வைத்த சொத்துக்களை ஏலம் விடுவதாக இந்தியன் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து இந்தியன் பாங்கி அதிகாரிகள் கூறியதாவது:–
கடந்த 20–ந்தேதி நிலவரப்படி பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்தியன் பாங்கிக்கு ரூ.149 கோடி கடன் நிலுவை தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதுகுறித்து பலமுறை நோட்டீசு அனுப்பியும் அந்த தொகையை செலுத்த அவர்கள் முன்வரவில்லை.
எனவே அடமானமாக எழுதி கொடுத்த நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். அவற்றை ஏலத்தில் விட்டு கடன் தொகையை ஈடுகட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக கோர்ட்டும் அனுமதி அளித்து விட்டதால் ஏலம் விடுவது உறுதியாகி விட்டது.
மதுரை நகர் மற்றும் உத்தங்குடி, வண்டியூர், முகாம்பிகை நகர், இலந்தைகுளம், மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 135 ஏக்கர் நிலங்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் காலிமனைகள் அதிகமாக உள்ளன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பல பிரிவுகளாக பிரித்து ‘‘இ–டெண்டர்’’ மூலம் ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் முறைப்படி வெளியிட்டுள்ளோம்.
வருகிற டிசம்பர் 31–ந் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு ஏலம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பி.ஆர்.பி. நிறுவன சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ள விவகாரம் மதுரை தொழில் அதிபர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: