Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த கோரி துரை தயாநிதி ஐகோர்ட்டில் மனுமுன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக, கடந்த 2012-ம் ஆண்டு கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அவருக்கு, 10.12.2012 அன்று மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அப்போது, பாஸ்போர்ட்டை மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பின்பு, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மேலூர் கோர்ட்டு 3.4.2013 அன்று துரைதயாநிதியிடம் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தது. அப்போது, வெளிநாடு செல்வதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்பின்பு, வெளிநாட்டுக்கு செல்வதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக தகவல் தெரிவித்தால் போதும் என்று நிபந்தனை மாற்றப்பட்டது.

இந்த நிபந்தனையை முழுமையாக தளர்த்தக்கோரி, துரைதயாநிதி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் சினிமா தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியது உள்ளது. ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்லும்போதும், திரும்பி வந்த பிறகும் கோர்ட்டில் தகவல் தெரிவிப்பதில் சிரமம் உள்ளது. என் மீதான கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். கோர்ட்டு விதித்த அனைத்து நிபந்தனைகளையும் நிறைவேற்றி உள்ளேன்.

எனவே, வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் பயண விவரங்களை மேலூர் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக கீழவளவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர், விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

0 comments: