Thursday, November 27, 2014

On Thursday, November 27, 2014 by Unknown in ,    
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் ஆய்வுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் கோவிலின் 4 நுழைவு வாயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கோவிலுக்குள், வட மாநில பக்தர்களுடன், அய்யப்ப பக்தர்கள் கூட்டமும் மிகுந்து காணப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் கோவிலில், இன்று ஆய்வு கூட்டம் நடந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சமந்த்ரோகன் ராஜேந்திரா, கோவிலின் நிர்வாக அதிகாரி நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோவிலில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூடுதலாக எந்தெந்த இடங்களில் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

0 comments: