Saturday, November 01, 2014

On Saturday, November 01, 2014 by Unknown in ,    

சுக்காளியூர் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சிமெண்ட் தடுப்புகள் அப்புறப்படுத்தப்படுமா?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு                                                                                                                                  கரூர் சுக்காளியூர் பிரதான சாலையில் விபத்தை ஏற்படுத்தும் சிமெ ண்ட் சாலைத் தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டு மென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் திருமாநிலையூரில் இருந்து சுக்காளியூர் வரை உள்ள பைபாஸ் சாலையில் நடுவே சிமென்ட் சாலைத் தடுப்புகள் சாலையை பிரிக் கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்க ளாக பெய்த மழையால் புதிய சுக்காளியூரில் மழை நீர் பெருக்கெடுத்தது. மழை நீர் சாலையில் தேங்கிய தால் அப்பகுதி மக்கள் சா லைத்தடுப்பை திருப்பி விட் டும் சில இடங்களில் அகற் றியும் நீர்வடிய செய்தனர்., தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் சாலைத்தடுப்புகள் நடுரோட்டில் குறுக் கும் நெடுக்குமாக கிடக்கின்றன. பகல் வேளையில் வாகன ஓட்டிகள் ஒருசிலர் சுதாரித்துக்கொண்டு வாகனங்களை ஓரமாக ஓட்டிச் செல்கின்றனர். இருந்தபோ திலும் டூவீலர் மற்றும் நான் கு சக்கர வாகனங்களில் வருபவர்களில் சிலர் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சிறு விபத்துகளில் சிக்கிவிடுகின்றனர். ஆனால், இரவில் இந்த இடத்தில் தெருவிளக்குகள் கிடையாது என்பதாலும், வளைவுகள் நிறைந்த பகுதியாக இருப்பதாலும், விழுந்து கிடக்கும் சாலைத் தடுப்புகள் தெரியாமலும் வாகனங்கள் அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றன. மேலும் 2 நாட்களாகியும் சம்மந்தப்பட்ட துறையினர் சாலை சிமென்ட் தடுப்புகளை அப்புறப்படுத்தி சரி செய்யாமல் உள்ளனர். நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தாறுமாறாக கிடக்கும் இந்த சாலை சிª மன்ட் தடுப்புகளை ஒழுங்குபடுத்தி போக்குவரத்துக் குக்கு வழி செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.  

0 comments: