Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

பசுபதிபாளைய பாலப்பணி தாமதம் பொதுமக்கள் கடும் அவதி பாமக குற்றச்சாட்டு      பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருவதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.

கரூர் மாவட்ட பாமக நிர்வாககுழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தனர்.  நிர்வாகிகள் சண்முகம், யுவராஜ், ராமச்சந்திரன், கார்த்திக், புகழேந்தி, பாஸ்கரன், மூர்த்தி, சாதிக்அலி, முருகன், பழனிசாமி, தாந்தோணிஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
 வரலாறு காணாத அளவுக்கு தமிழக அரசு பால் விலையை உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், பால்விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், மின்சார கட்டண உயர்வை கண்டிப்பது, இலங்கையில் பொய்வழக்கு போட்டு5 அப்பாவி தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கொடும்பாவ செயல், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக  அவர்களை மீட்டு வரவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கரூர் மாவட்டத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வாங்கல் வாகன போக்குவரத்து பாலத்தை உடனடியாக கட்டிமுடிக்க வேண்டும்.
 பசுபதிபாளையம் பாலப்பணியை செய்யாமல் காலம் தாழ்த்துவது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்குகிறது. இதனை வன்மையாக கண்டிப்பது, கரூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர்தேங்கி நிற்கிறது.இதனால்  நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக  மருத்துவ முகாம் நடத்தவேண்டும். வரும் 10ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்வது, நவம்பர் 14ம் தேதி கரூர் மாவட்டத்தில் பால்விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, மதுபானக் கடைகளை அகற்றாதது போன்றவற்றை கண்டித்து பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 comments: