Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    
Displaying DSC_0725.JPG
 காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவதாக முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .மதுரையில் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் எம் பி ராம்பாபு ,முன்னாள் எம் எல் ஏ ராஜேந்திரன் ,சிலுவை ,லக்கி மைதீன் பாட்சா ,வடிவேல் ,பாரத் நாச்சியப்பன் ,ஸ்ரீனிவாசன் அரசரடி பைரவ மூர்த்தி ,டிராவல்ஸ் சுந்தரபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .கூட்டத்தில் பங்கேற்று பேசிய பெரும்பாலானோர் ,தற்போது தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் ,"வளமான தமிழகம் " "வலிமையான பாரதம் "  என்ற கோஷத்தோடு தமிழகத்தில் வாசன் தலைமையில் ஆட்சி அமைத்திட உறுதி ஏற்போம் என்றும் புதிய கட்சி தொடங்கிடும் நாள் அன்று திருச்சி மாநகரில் பெருந்திரளாக தொண்டர்கள் பங்கேற்றிட உறுதி மேற்கொள்ளபப்ட்டது

0 comments: