Thursday, November 06, 2014

On Thursday, November 06, 2014 by Unknown in ,    

கரூரில் வங்கி மேலாளர்களுக்குஒருநாள் கருத்துப்பட்டறை 

 கரூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் குறித்து ஒரு நாள் கருத்துப்பட்டறை நடைபெற்றது.
நிதியியல் உள்ளாக்கம், நிதியியல் கல்வியறிவு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள வங்கி கிளை மேலாளர்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் ஒரு நாள் கருத்துப்பட்டறையை கலெக்டர் ஜெயந்தி துவக்கி வைத்து பேசியதாவது:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2011ல் துவக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களில் புதுவாழ்வு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மற்றும் குளித்தலை வட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதுவாழ்வு திட்டத்துடன் இணைந்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்தில் நன்றாக செயல்படுகிறது. அரசு வழங்கும் திட்டங்கள் வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து உதவிடும் வகையில் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்த்திட வேண்டும். அதனடிப்படையில் கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசுத்துறைகள் வழங்கும் நிதியினை முறையாக ஏழை மக்களுக்கு வங்கிகள் மூலம் சென்றடையவும், இலக்கு மக்களை ஒருங்கிணைத்து நிலைத்த மற்றும் நீடித்த தன்மையுடைய வலுவான மக்கள் அமைப்புகளான சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஒரே தொழில் செய்யும் கூட்டமைப்புகளுக்கு நிதி வழங்கிட இந்த கருத்துப்பட்டறை நடைபெறுகிறது. இதன் நோக்கம் புதுவாழ்வு மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என அனைவரும் இணைந்து தகவல் பரிமாற்றம் செய்து இலக்கை சரியாக அடைவது மட்டுமின்றி விவசாயம், தொழில் என கலாசாரத்திற்கு ஏற்றவாறு உதவ வேண்டும் என்பதாகும். இந்த கருத்துப்பட்டறையில் அனைவரும் கலந்தாலோசித்து முழு ஒத்துழைப்பை வழங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் முகமது சகாப்தீன், புதுவாழ்வு திட்ட மேலாளர் ரூபவேல், உதவி திட்ட இயக்குநர்கள் லட்சுமணன், விஜயகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், மாவட்ட வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் தமயந்தி, லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் (ஓய்வு) ராமச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் (நுண்நிதி) முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: