Thursday, December 04, 2014

On Thursday, December 04, 2014 by farook press in ,    
அரசுப் பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஊதிய முரண்பாடுகளைக் களைவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு முடிவுப்படி மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 3ம் தேதி புதன்கிழமை அரசு ஊழியர்களின் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் தென்னம்பாளையம் காட்டுவளவு ஏஆர்எஸ் மருத்துவமனை முன்பிருந்து அரசு ஊழியர் ஊர்வலம் தொடங்கியது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் செ.நடராசன் இந்த ஊர்வலத்துக்குத் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி சங்கக் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆ.அம்சராஜ் உரையாற்றினார். இதில் பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் ஆர்.வி.இ. லே அவுட், செரீப் காலனி, தாராபுரம் சாலை, கே.எஸ்.சி.பள்ளி சாலை வழியாக அரிசிக்கடை வீதியை அடைந்தது. அங்கு கோரிக்கைகளை விளக்கி டி.சிவஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினார். நிறைவாக சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.முருகேசன் நன்றி கூறினார்.

திருப்பூர் காட்டுவளவு ஏ.ஆர்.எஸ். மருத்துவமனை முன்பாக அரசு ஊழியர் சங்க ஊர்வலத்தை வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் டி.சிவஜோதி கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார்.

0 comments: