Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in ,    
உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக் கழக மானியக் குழு நிதி உதவியுடன் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லூரிச் செயலர் சுமதி கிருஷ்ணபிரசாத் குத்துவிளக்கேற்றி வைத்தார். முதல்வர் கோ.சுகுணா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிறுவன முன்னாள் இயக்குநர் பி.கனகசபாபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிங்கப்பூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரகாஷ், குறைந்த முதலீட்டுடன் இணையதளம் மூலமாகத் தொழில் தொடங்கும் முறைகள் கு றித்து விளக்கினார்.
கோவை ஆர்விஎஸ் கல்லூரிப் பேராசிரியர் சவீதா நாயர், தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார். இதில், 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

0 comments: