Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by Unknown in ,    
சமையல் எரிவாயு உருளை மானியத்துக்கானபதிவு செய்யும் சிறப்பு முகாமை திருப்பூரில் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் {ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
சமையல் எரிவாயு உருளை மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல் எரிவாயு விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பல வழிகளிலும் இதற்காக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் இதற்காக அலைக்கழிக்கப்படும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், தங்கள் வருவாயை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைத் தவிர்க்கும் வகையில் பாரத் எரிவாயு நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் திட்டத்துக்குப் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திருப்பூரில் நடைபெற்றது. இம்முகாமை, வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் துணை மேயர் சு.குணசேகரன் ஏற்பாடு செய்து, தொடங்கி வைத்தார். இந்த முகாமில் சமையல் எரிவாயு விநியோக மையத்தின் ஊழியர்கள் நேரடியாக பங்கேற்று மானியத் திட்டத்துக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்தனர்.
இதில், பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரவும் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன்காரணமாக, ஒரேநாளில் 31-ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மானியத் திட்டத்துக்கான வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வாலிபாளையம் பள்ளியில் செவ்வாய்க்கிழமை(டிசம்பர் 23) நடைபெற இருப்பதாக துணை மேயர் குணசேகரன் தெரிவித்தார்.

0 comments: