Monday, December 22, 2014

On Monday, December 22, 2014 by Unknown in ,    
திருப்பூர் ஊத்துக்குளி சாலையிலுள்ள பனியன் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின.
திருப்பூர் மண்ணரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி(53). இவர், என்.ஆர்.கே. புரம் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நிறுவனத்தை பூட்டிச் சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நிறுவனத்தின் ஜன்னல் வழியாகப் புகை மூட்டம் வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாகத்
திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர், 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள், தளவாடப் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் வடக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

0 comments: