Thursday, December 25, 2014
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது; இது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவைத் தலைவர் வி.பழனிசாமி, வடக்கு தொகுதி செயலளார் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசியதாவது:-
அண்ணா தி.மு.க., கட்சியின் விதிமுறைப்படி, 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை கொண்ட திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.கவின் உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாநகரம், மாவட்டம், ஒன்றியம், அனைத்து கிளைகள் என ஒவ்வொரு அமைப்பிலும் தலைவர், செயலாளர், இணை செயலாளர், 2 துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி அல்லது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் 3 என, மொத்தம் 9 வகையான பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். மேலு ம் தேர்தல் ஆணையாளர்களாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர்களும் நியமனம் செய்யபட்டுள்ளனர். எனவே, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே, தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். அம்மா அவர்களால் நமது மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்த முதல் மாவட்டம் திருப்பூர் மாநகர் மாவட்டம் என்ற பெருமையை மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், கட்சிக்கும் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், வருகிற கட்சி அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது என்றும், திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக அதிக நிதி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டும், வருகின்ற 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வகையில் சிறப்பாக செயலாற்றுவது, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,கருப்பு சாமி, தொகுதி செயலளார்கள் தம்பி மனோகரன், சேவூர் வேலுசாமி, லோகநாதன்,சார்பு அணி நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளை யம் மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சிவாச்சலம், மு.சுப்பிரமணியம், நகர செயலாளர்கள் வி.கே.பி.மணி, ராமசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டவரக்ளும், சார்பு அணி நிர்வாகிகள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல்பாபு, ஆனந்தகுமார், சித்ராதேவி, ஜோதிமணி கிருதிகசொமசுன்தரம், வசந்தாமணி,அய்யாசாமி உள்ளிட் டவர்களும் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
-
உடுமலை,: உடுமலை நேதாஜி மைதானத்தில் தென்னிந்திய கபடி போட்டி இன்று துவங்கி 26ம் தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி,...
0 comments:
Post a Comment