Wednesday, December 10, 2014
திருப்பூர் : "ஆதார் அட்டை பெறுவதற்கான முகாம் இன்று முதல் செயல்படும்; மக்கள் குழப்பமின்றி, அந்தந்த பகுதிகளில் பதிவு செய்யலாம்,' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஆதார் அட்டை பதிவில் விடுபட்டோருக்கு, இன்று முதல் (டிச., 10) பதிவு மையம் செயல்பட உள்ளது. ஒன்று முதல் 20 வரையிலான வார்டு மக்கள், 15 வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தையும்; 21 முதல் 40வது வார்டு வரை, நல்லூர் மண்டல அலுவலகத்தையும்; 41 முதல் 60 வரை மாநகராட்சி அலுவலகத்தையும் அணுக வேண்டும்.மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு வைத்திருப்போர், உரிய மையத்துக்கு சென்று, தங்களது தகவல் கம்ப்யூட்டரில் பதிவாகி உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்; விவரம் இடம் பெற்றிருந்தால், ஆதார் அட்டைக்கான டோக்கன் கொடுக்கப்படும்.டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளான்று, குடும்பத்துடன் போட்டோ எடுப்பதற்கு, ஆதார் அட்டை மையத்துக்கு வர வேண்டும். ஆதார் அட்டைக்கு புதியதாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம், ஜன., 20க்கு பிறகே வழங்கப்படும். ஏற்கனவே ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து கார்டு பெறாதவர்கள், ஆதார் அட்டைக்கான சிலிப்பை பயன்படுத்தி, தீதீதீ.தடிஞீச்டி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில், கார்டை பதிவிறக்கம் செய்யலாம்.
போட்டோ ஏற்கனவே எடுத்திருந்தும், கைவிரல் ரேகை உள்ள சிலிப் கொடுக்கப்படாமல் இருந்தால், சம்மந்தப்பட்ட மையங்களுக்கு, வரும் ஜன., 20க்கு பின்னர் சென்று, ஆதார் அட்டையின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே போட்டோ எடுத்து, ஆன் லைனில் சரிபார்க்கும் போது விவரங்கள் இல்லாமல் தள்ளுபடி செய்து இருந்தால், மீண்டும் பழைய சிலிப் வைத்தே புகைப்படம் எடுத்து கொள்ளலாம். ஆதார் அட்டை பெற்று, அதில் முகவரியை மாற்ற வேண்டியிருந்தால் தீதீதீ.தடிஞீச்டி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில் முகவரியை மாற்றி கொள்ளலாம்.எனவே, மக்கள் குழப்பமின்றி தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று, விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...

0 comments:
Post a Comment