Sunday, December 14, 2014

On Sunday, December 14, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை  நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் வி.ஏ.வி., பள்ளி இணைந்து, துாய்மை பாரத திட்டத்தில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.மாணவ மாணவியர், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரிப்பது குறித்து, துாய்மையை வலியுறுத்தும் வாசகங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு, வினியோகித்தனர்.
சுகாதாரத்தை பின்பற்றுவது குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சுற்றுப்பகுதியை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், வி.ஏ.வி., பள்ளி நிர்வாகிகள் நிர்மலா, அசோக்குமார், பள்ளி முதல்வர் ஸ்ரீஜா மற்றும் நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: