Sunday, December 14, 2014

On Sunday, December 14, 2014 by farook press in ,    
மத்திய ஜவுளித்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி மையம், தற்போது 6 மாத கால தயாரிப்பு (மெர்ச்சென்டைசிங்), கம்ப்யூட்டர் பேட்டர்ன் மேக்கிங், தையல் பயிற்சிகளை  அளித்து வருகிறது. மேலும், நிட்டிங், டையிங், பிரிண்டிங், ப்ளேனிங், கார்மென்ட் காஸ்டிங், பேட்டன் வடிவமைப்புப் பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களிலும், அதன் துணை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் பெற முடியும். இது தவிர, இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு 100 சத வீதம் வேலைவாய்ப்பினை ஏ.டி.டி.சி நிறுவனம் பெற்றுத்தருகிறது.
பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதால் சுயமாகத்தொழில் தொடங்குபவர்களுக்கும் இந்த பயிற்சிகள் உதவியாக இருக்கும்.
அந்த வகையில், தற்போது இந்த பயிற்சி மையத்தில் அளிக்கப்பட உள்ள மெர்ச்சென்டைசிங் தொழில்நுட்பப் பயிற்சியில் இருபால் இளைஞர்களும் சேர்ந்து பயன்பெறலாம் மேற்கண்டவாறு  ஏ.டி.டி.சி.,பயிற்சி மைய முதல்வர் நாகராஜன் தெரிவித்துள்ளார்

0 comments: