Sunday, December 14, 2014
பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து திருப்பூரில் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழாவை நடத்தி வருகின்றனர். இதன் 12-ஆவது ஆண்டு புத்தகத்திருவிழா வருகின்ற 2015-ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகின்றன.
இதற்காக புத்தகக்கண்காட்சி வரவேற்புக் குழுவின் அமைப்புக்கூட்டம் திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ட்ரிபிள் எக்ஸ். குப்புசாமி தலைமை தாங்கினார்.பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் எஸ்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். புத்தகக்கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பின்னல் புக் டிரஸ்ட் தலைவர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் அ.நிசார்அகமது ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் புதிய வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. வரவேற்பு குழுத்தலைவராக ஆர்.ஏ.ஜெயபால், செயலாளராக செ.முத்துக்கண்ணன், பொருளாளராக அ.நிசார்அகமது, மேலும், 29 பேர் துணைத்தலைவர்களாகவும், 32 பேர் உதவிச்செயலாளர்களாகவும்1 32 பேர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள் எம்.ஜீவானந்தம், எம்பரர் பொன்னுசாமி, லிங்க்ஸ் சௌகத்அலி, பிரிண்டிங் குமாரசாமி, திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர்.ஏ.முருகநாதன், திருப்பூர் கலை இலக்கியப்பேரவை பொதுச்செயலாளர் வி.டி.சுப்பிரமணியம், ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எம்.தங்கராஜ், யுனிவர்சல் கல்வி நிறுவனத் தாளாளர் எஸ்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருப்பூர் அடுத்துள்ள புதுப்பாளையம் ஊராட்சி, நல்லிகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிமாறன் (வயது 23). இவர் கோவையில் சிவில் என்ஜி...
-
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகே...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
0 comments:
Post a Comment