Sunday, December 14, 2014

On Sunday, December 14, 2014 by farook press in ,    
நடிகர் ரஜனிகாந்த் 65 வது பிறந்த தின விழா மற்றும் அவர் நடித்து நேற்று  வெளியான லிங்கா திரைப்படம் தொடக்க விழாவை   முன்னிட்டு திருப்பூர் அவினாசி ரோடு காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள்  சங்கம் சார்பில் 1000 குழந்தைகளுக்கு பால்,பிரெட் பிஸ்கட் ஆகியன வழங்கும் விழா திருப்பூர் புது பஸ் நிலையம் பகுதியில் உள்ள சக்தி தியேட்டர் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு  தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள்  சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமை தாங்கி 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரஜனி படம் போட்ட மஞ்சள் பையில் பால்,பிரெட் பிஸ்கட் ஆகிய உணவு பொருட்களை போட்டு வழங்கினார். நிர்வாகிகள் தென்றல் என்கிற தென்னவன்,அமர்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி கவுரிகனகு வரவேற்று பேசினார். விழாவில் நிர்வாகிகள் ராஜேஷ், தங்கராஜ், ரகுராமன், தனபால், கென்னடி, கண்ணம்மாள், சுலோச்சனா, ராஜாத்தி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பூவாத்தம்மாள் நன்றி கூறினார். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள்  சங்கம் சார்பில் ரஜனி ரசிகர்களுக்காக பிரத்யேகிதமாக காலை 4 மணிக்கே லிங்கா திரைப்படம் திரையிடப்பட்டது. இதற்காக தியேட்டர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் ஏராளமான ரஜினி நடித்த லிங்கா பட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது அப்பகுதி முழுவதும் பின்னர் 7 மற்றும் 11 மணி,மதியம் 3, மாலை 6,  இரவு 10 மணி என 6 காட்சிகள் காட்டப்பட்டது. அப்போது ரஜனி ரசிகர்கள் பெருத்த ஆரவாரத்துடன் வந்து படத்தை ரசித்து பார்த்து சென்றனர். தமிழ்நாடு ரஜனிகாந்த் பொது தொழிலாளர்கள்  சங்க தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியதாவது: எங்கள்  சங்கம் சார்பில் கடந்த 20 வருடங்களாக ரஜனி பிறந்த நாள் கொண்டாடிவருகிறோம். அப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறோம்.இந்த ஆண்டு 1000 குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளோம்.லிங்கா படம் மிக அருமையாக,நன்றாக வந்துள்ளது. ரஜனிக்கு பெயர் சொன்ன பாட்சா படத்தை விட 1000 மடங்கு இந்த படம் நன்றாக வந்துள்ளது. இதில் தன்னுடைய நிலைப்பாடு, மனதில் உள்ளதை ரஜனி கூறியுள்ளார். இந்தப்படம்  அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். அதனால் ரஜனி 100 ஆண்டுகள் எந்த நோயும் வராமல் வாழவேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: