Sunday, December 14, 2014

On Sunday, December 14, 2014 by Unknown in ,    
கிரானைட் நிறுவனங்கள் மீது மேலும் 10 வழக்குகள் தாக்கல்: சகாயம் 15–ந்தேதி 2–ம் கட்ட விசாரணைமதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகரி சகாயம் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி சகாயம் கடந்த 3–ந்தேதி முதல் மதுரையில் விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
கிரானைட் தொழில் முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விவசாயிகள் இதுவரை 160–க்கும் மேற்பட்டோர் புகார் மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.
மேலும் வருகிற 15, 16 ஆகிய தேதிகளிலும் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என்று சகாயம் தெரிவித்துள்ளார்.
வருகிற 15–ந்தேதி மதுரை வரும் சகாயம் 2–ம் கட்ட விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட சகாயம் முடிவு செய்துள்ளனர். இது கிரானைட் குவாரி அதிபர்கள் மத்தியில் பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி அதிபர்கள் 86 பேருக்கு சம்மன் அனுப்பி அபராதம் விதிப்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். குவாரி அதிபர்கள் மற்றும் அவரது வக்கீல்கள் கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூலம் பட்டா நிலங்கள் கீழவளவு, இ.மலம்பட்டி பகுதியில் பட்டா நிலங்களை ஆக்கிரமித்து கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 10 வழக்குகள் மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் 89 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தற்போது மேலும் 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பி. கிரானைட் நிர்வாகம் மீது மட்டும் இதுவரை 65 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்

0 comments: