Sunday, December 14, 2014

On Sunday, December 14, 2014 by Unknown in ,    
திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் அன்னபூரணி (வயது21). இவருக்கும் மதுரை நரசிங்கம் பட்டியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அதன்பின்னர் பழனிவேல், வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அன்னபூரணி திருமங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அங்குள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து ‘பி.எட்’ முதலாம் ஆண்டும் படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அன்னபூரணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், விஷம் குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அன்னபூரணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜாஸ் மின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அன்னபூரணிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.

0 comments: