Friday, December 05, 2014

On Friday, December 05, 2014 by Unknown in ,    

மதுரை மாவட்டம் மேலூர், கீழையூர், கீழவளவு, திருமோகூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கிரானைட் முறைகேடு நடந்தது. இம்முறைகேடு பற்றி விசாரிக்கும்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரை வந்த சகாயம், தனது குழுவினருடன் விசாரணையை தொடங்கினார். இவரது பாதுகாப்புக்கு 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை வந்த சகாயத்திடம் மேலூர், கீழவளவு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் நேற்று புகார் மனு கொடுத்தனர். அதில் நில அபகரிப்பு, குறைந்த விலைக்கு வாங்கியது, நிலத்திற்குறிய பணம் முழுவதும் கொடுக்காதது, மிரட்டல், பாதையை மறைத்து நிலத்தை அபகரித்தது போன்ற புகார்கள் கொடுக்கப்பட்டது.
இதனால் சகாயம் விசாரணை நடத்தும் அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் சகாயத்திடம் யார்? யார்? புகார் கொடுக்க வருகிறார்கள் என வேவு பார்க்க கிரானைட் அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் ஊழியர்கள், புரோக்கர்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். குறிப்பாக பி.ஆர்.பி. நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் சில ஊழியர்கள் வேவு பார்த்து வருவதாக விசாரணை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வந்தவர்கள் தெரிவித்தனர். இப்படி ஒரு கும்பல் நோட்டமிடுவதால் எங்களுக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர்கள் புகார் கூறினர்.
இதை தொடர்ந்து மதுரை நகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் சகாயம் போனில் பேசினார். ஏற்கனவே பாதுகாப்புக்கு 2 துப்பாக்கி போலீசார் நியமிக்கப்பட்ட நிலையில் 3 சப்–இன்ஸ்பெக்டர்கள், 5 போலீசார் கூடுதலாக போடப்பட்டு உள்ளனர். வேவு பார்க்கும் நபர்களை ரகசியமாக கண்காணித்து அவர்களை பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் விசாரணை அலுவலகத்தை சுற்றியும் மப்டி போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

0 comments: