Friday, December 05, 2014

On Friday, December 05, 2014 by Unknown in ,    







கிரானைட் குவாரி அதிபர்கள் மீது ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் பொதுமக்கள் புகார்மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விளை நிலங்கள் மற்றும் வீடுகளை கிரானைட் அதிபர்கள் அபகரித்து விட்டதாக பொதுமக்கள் அவரிடம் புகார் கூறினர்.

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருமானத்தில் ரூ.16 ஆயிரத்து 388 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அப்போதைய கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து கலெக்டராக பொறுப்பேற்ற அன்சுல் மிஸ்ரா இது குறித்து தீவிர ஆய்வு நடத்தினார். அப்போது பி.ஆர்.பி., உள்ளிட்ட 86 கிரானைட் குவாரிகளில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு மேலூர் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நேற்று முன்தினம் மதுரை வந்தார்.

மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் அவருக்கான தனி அலுவலகத்தில் நேற்று முன்தினம் அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று காலை தனி அலுவலகத்துக்கு மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் தங்களது குறைகளை கூறுவதற்காக மனுக்களுடன் வந்தார்கள். ஒவ்வொருவராக சென்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் மனுக்களை நேரில் கொடுத்தனர்.

அப்போது, “கிரானைட் குவாரி அதிபர்களால் எங்கள் விளை நிலங்கள், வீடுகளை இழந்துவிட்டோம். அவற்றை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்று ஏராளமானோர் தெரிவித்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், கிரானைட் முறைகேடுகள் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொதுமக்கள் இழந்துள்ள வீடு, நிலங்கள் குறித்தும் கோர்ட்டில் தனது அறிக்கையை கொடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, விசாரணையின் போது பல்வேறு அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால், விசாரணை அதிகாரி சகாயத்திற்கும், அவருடைய குழுவினருக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன

0 comments: