Friday, December 05, 2014

On Friday, December 05, 2014 by Unknown in ,    
வன்முறையை தூண்டியதாக எச்.ராஜா மீது வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது: –
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, சென்னையில் 4.1.2014 அன்று நடைபெற்ற இந்து தர்ம பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில், பெரியார், இயேசு கிறிஸ்து, போப் ஆண்டவர், இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசி உள்ளார். அவரது இந்த பேச்சு இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அவரது, இந்த பேச்சு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
ராஜாவின் பேச்சு, ‘யூ டியூப்‘பில் வெளியிடப்பட்டுள்ளது. ராஜா மீது வழக்கு பதிவு செய்யவும், ‘யூ டியூப்‘பில் உள்ள அவரது பேச்சு பதிவை நீக்கவும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எச்.ராஜா மீது இருபிரினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘மனுதாரரை போன்று எச்.ராஜா மீது கலிபூங்குன்றன் என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153(ஏ) (இருபிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல்), 505(2) (பகைமையை உருவாக்கும் வகையில் பேசுதல்) ஆகியவற்றின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் 1.10.2014 அன்று வழக்குப்பதிவு செய்துள்ளார் என்று தெரிவித்தார்

0 comments: