Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பொது வாழ்கைக்கு பாதிப்பு இல்லாமல் வழக்கம் போல பஸ்களை இயக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்றும், இன்றும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க அதிகாரிகளுடன் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் உடுமலை கிருஷ்ணன் ஆகியோர்களுடனும் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சருடன் தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்னுசாமி, கவுன்சிலர்கள் எம்.கண்ணப்பன், சண்முகம், நிர்வாகிகள் தங்கமுத்து, கண்ணபிரான், வளர்மதி சாகுல் ஹமீது, சின்னு, அ.கண்ணப்பன், திருப்பூர் கிளை அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும்  ரவிக்குமார், மாரிமுத்து, சிவகுமார், கணேஷ், கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர். 
இதே போல் பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,ஆகியோர் நேரில் சென்று இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை பகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னால் அமைச்சர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்., தாராபுரத்தில் கே,போன்னுசாமி எம்.எல்.ஏ.வும்,காங்கயத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ.,வும் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் காலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



0 comments: