Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by farook press in ,    
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தமிழக அரசு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் போராடி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, தாராபுரம் ஆகிய மூன்று ஊர்களில் ஜனவரி 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் அருகில் அன்று மாலை 5 மணிக்கும், தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பும், உடுமலை பேருந்து நிலையம் முன்பும் அன்று மாலை 4 மணியளவிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் கட்சி அணியினர் பெருந்திரளாகப் பங்கேற்கும்படி மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments: