Tuesday, December 23, 2014

On Tuesday, December 23, 2014 by farook press in ,    
ஊத்துக்குளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளராக கே.காமராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், பி.ராஜூ, சி.சுப்பிரமணியம், என்.கோபாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.மதுசூதனன், சி.மூர்த்தி, எஸ்.முத்துக்கண்ணன், பி.முத்துசாமி, எஸ்.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி ஆகிய 13 பேர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முன்னதாக மூன்றாம் நாளான செவ்வாயன்று காலை பிரதிநிதிகள் விவாதத்திற்கு கே.காமராஜ் தொகுப்புரை ஆற்றினார். மாநில மாநாட்டிற்கு 4 பெண்கள் உள்பட 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிநிதிகள் மாநாட்டின் முடிவில் வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.குமார் நன்றி கூறினார்.
மாபெரும் பேரணி
மாநாட்டின் நிறைவில் ஊத்துக்குளி ஆர்.எஸ். மேம்பாலம் அருகில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். விஜயமங்கலம் சாலை வழியாக ஊத்துக்குளி டவுன் தோழர் பி.ராமமூர்த்தி நினைவுத் திடலைச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் ஒன்றியக்குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். தமுஎகச மக்கள் கலைக்குழு, அவிநாசி திடுமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.கே.கொளந்தசாமி நன்றி கூறினார்.

0 comments: