Tuesday, December 23, 2014
முதியோர், விதவைகள் உதவித் தொகை நிறுத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து தாலுகா தலைநகரங்களிலும்
ஜனவரி 7ம் தேதி
மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஊத்துக்குளியில் மூன்று நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
இம்மாநாட்டில் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளராக கே.காமராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இம்மாநாட்டில் மொத்தம் 41 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், கே.காமராஜ், கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், பி.ராஜூ, சி.சுப்பிரமணியம், என்.கோபாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.மதுசூதனன், சி.மூர்த்தி, எஸ்.முத்துக்கண்ணன், பி.முத்துசாமி, எஸ்.சுப்பிரமணியம், கே.ரங்கராஜ், ஜி.சாவித்திரி ஆகிய 13 பேர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். முன்னதாக மூன்றாம் நாளான செவ்வாயன்று காலை பிரதிநிதிகள் விவாதத்திற்கு கே.காமராஜ் தொகுப்புரை ஆற்றினார். மாநில மாநாட்டிற்கு 4 பெண்கள் உள்பட 19 பேர் கொண்ட பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிநிதிகள் மாநாட்டின் முடிவில் வரவேற்புக்குழுச் செயலாளர் ஆர்.குமார் நன்றி கூறினார்.
மாபெரும் பேரணி
மாநாட்டின் நிறைவில் ஊத்துக்குளி ஆர்.எஸ். மேம்பாலம் அருகில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். விஜயமங்கலம் சாலை வழியாக ஊத்துக்குளி டவுன் தோழர் பி.ராமமூர்த்தி நினைவுத் திடலைச் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமையில் ஒன்றியக்குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். தமுஎகச மக்கள் கலைக்குழு, அவிநாசி திடுமம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எஸ்.கே.கொளந்தசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...





0 comments:
Post a Comment