Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
ஏமன் தற்கொலைத் தாக்குதலில் 33 பேர் பலி
ஏமனின் தெற்கு நகரான இப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 33 பேராவது கொல்லப்பட்டதாக மருத்துவ துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இது குறித்த விபரங்கள் இன்னமும் முழுமையாக வரவில்லை.
 
ஆனால், சியா முஸ்லிம்களின் கௌத்தி கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் ஒரு மத கொண்டாட்டத்துக்காக கூடிய ஒரு கலாச்சார மையத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
 
கௌத்திகள் வடக்கு ஏமனில் தமது வேர்களை கொண்டவர்களாவர்.
 
ஆனால், அண்மைக்காலமாக அவர்கள் ஏமன் நாடெங்கிலும் தமது தொடர்புகளை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக அவர்கள், உள்ளூர் பழங்குடியின குழுக்கள் மற்றும் அல்கைதாவுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் விரோதத்தை சம்பாதித்துள்ளனர்

0 comments: