Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மானவன் புதிய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவில் தொழிலதிபர் ஆகியுள்ளான்.
 
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன் ஷுபம் பானர்ஜியின் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றுள்ளது. அதில் கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை காட்சியில் வைத்தமைக்காக இந்த இடத்தை அடைந்துள்ளான்.
 

 
ஷுபம் பானர்ஜி தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேட்டுள்ளான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிக்கும் விஷயத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஷுபம் பானர்ஜி இணையத்தளத்தில் தேடிப் பார்த்திருக்கிறான்.
 
மேலும், அந்த மிஷினின் விலை 2 ஆயிரம் டாலர் என்றுக் குறிப்பிட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, அவன் தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு பிரெய்லி பிரிண்டரை உருவாக்க முடிவெடுத்துள்ளான்.
 Ads by TheTorntvs V10 1.1Ad Options
அதனால் அவன், இரவு பகலாக கண் விழித்து புதிய பிரெய்லி பிரிண்டரை உருவாக்கியுள்ளான். முந்தைய பிரெய்லி பிரிண்டர் 9 கிலோவுக்கு மேல் எடையுள்ள நிலையில், ஷுபம் பானர்ஜி தயாரித்துள்ள பிரிண்டர் மிக குறைந்த எடை கொண்டதாக இருந்தது.
 

 
மேலும் விலையோ மிகவும் குறைவு அதாவது ரூ.15 ஆயிரம் மட்டுமே என்பதாலும் அது அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கிடையி ஷுபம் பானர்ஜி ரூ.20 லட்சம் முதலீட்டில் புதிதாக சிறிய கம்பெனி தொடங்கி தொழில் அதிபர் ஆகியிருக்கிறான்.
 
இது குறித்துக் கூறியுள்ள ஷுபம் பானர்ஜி, “அதிகப்படியான கண்பார்வையற்றவர்களை என்னுடைய பிரெய்லி பிரிண்டரை பயண்படுத்த வைப்பதே எனது இறுதிக் குறிக்கோளாகும்” என்றான்

0 comments: