Thursday, January 22, 2015

On Thursday, January 22, 2015 by Unknown in ,    
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகைதரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பாதுகாப்புக்காக 'பீஸ்ட்' காரை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.

 
டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா 25 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
 
இதனால், டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வருகைதரும் ஒபாமாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி குண்டுகள் துளைக்காக சொகுசு காருக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
 
18 அடி நீளமும், எட்டு டன்கள் எடையும் கொண்ட இந்த கார் பிரபலமாக 'பீஸ்ட்' என்றும் அழைக்கப்படுகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆர்மர் பிளேட்டுகள் 8 அங்குல அளவு தடிமன் கொண்டதாகும்.
 
இந்த கார் ஒரு போயிங் 757 விமானத்தின் எடையையும் தாங்கக் கூடிய திறன் வாய்ந்தது. இந்த காரின் டயர்கள் மிக உறுதி வாய்ந்ததவை. டயருக்குள் பிரத்யேகமாக அடைக்கப்பட்டிருக்கும் காற்று  எரிபொருள் டேங்க் வெடிப்பதை தடுக்கும் சக்தி வாய்ந்தது.
 
காருக்கு அடியில் ஆக்ஸிஜன் டேங்கும், தீயை அணைக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் கூட படம் பிடிக்கக் கூடிய நைட் விஷன் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
 
இந்த காரை அதற்கென பிரத்யேகமாக பயிற்சி பெற்ற சீக்ரட் சர்வீஸ் ஓட்டுநரால் மட்டுமே ஓட்ட முடியும். அதிபர் ஒபாமா பயணிக்க உள்ள இந்த ‘பீஸ்ட்’ காரில் சாட்டிலைட் போன் பொருத்தப்பட்டுள்ளது.
 
ஒபாமா தனது சொந்த காரையே குடியரசு தின விழாவில் பயன்படுத்த உள்ளதாகவும், எனினும், பாதுகாப்பு கருதி இந்தக் காரை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: