Thursday, January 01, 2015
தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை தேர்தல் வன்முறைகள் காரணமாக காயமடைந்த 46 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல்இதுவரை 535 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 154 வன்முறை சம்பவங்களும் அடங்கும் என்று தெரிவித்த அவர், 29 தனிநபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஒரு குண்டுத் தாக்குதல் உட்பட ஒன்பது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ரோகன ஹெட்டியாராச்சி, தனிப்பட்ட சொத்துக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட 30 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்குள் 32 தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குருநாகலை, புத்தளம், கண்டி ,களுத்துறை, காலி, ஆகிய மாவடடங்கில் இருந்து அதிகபட்ச வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும்போது இந்த முறை தேர்தல் சட்டங்களை மீறும் செயல்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார் ரோகன ஹெட்டியாராச்சி.
இந்த தேர்தலில் அரச உடைமைகளைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது மற்றும் அரச அதிகாரங்கள் தவறான முறையில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் சம்பவங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார் பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 18- ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும்27ஆயி...
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
மாவட்டத் தலைநகரமாக உயர்ந்துள்ள திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதுடன், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையை பன்னோக்கு சிறப்பு (மல...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
0 comments:
Post a Comment