Wednesday, February 25, 2015

On Wednesday, February 25, 2015 by Unknown in ,    
கிரானைட் முறைகேடு குறித்த தகவல்களை 28–ந்தேதிக்குள் அதிகாரிகள் தெரிவிக்க சகாயம் கெடுசென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
இது குறித்து பொது மக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்ற அவர், மேலூர் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காணாமல் போன கண்மாய்கள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் 1995 முதல் 2005 வரை பணிபுரிந்த அதிகாரிகள் பட்டியல், ஒவ்வொரு துறை வாரியான இழப்புகள், உயிர்ப்பலி போன்ற விபரங்களை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.
சகாயம் கேட்ட தகவல்களை வருவாய்த்துறை, நில அளவை, பொதுப் பணித்துறை, கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொல்லியல் மற்றும் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். சில துறைகளில் தகவல்களை சேகரிப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்படுகிறது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற மார்ச் மாதத்தில் சகாயம் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வருகிற 28–ந்தேதிக்குள், தகவல்களை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சகாயம் ‘கெடு’ விதித்து உள்ளார்.
சென்னையில் வருகிற 26–ந்தேதி அறிவியல் நகரம் சார்பில் கண்காட்சி நடக்கிறது. இந்த துறையின் அதிகாரியான சகாயம், அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பின்னர் 27–ந்தேதி மீண்டும் மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை சகாயம் தொடங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments: