Thursday, February 19, 2015

On Thursday, February 19, 2015 by Unknown in ,    

வெளியூர் செல்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து சென்றால் வீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
மதுரை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்வதாக இருந்தால் அதுபற்றிய விபரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது கட்டுப்பாட்டு அறைக்கோ (100) தெரிவித்து சென்றால் கண்காணிக்கப்படும். இதனால் கதவை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுக்கப்படும்.
மேலும் வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது சில ‘மர்ம’ ஆசாமிகள் கதவை தட்டி தண்ணீர் கேட்பது போலவோ, கேஸ் கனெக்சன் சரிபார்க்க வேண்டும் என்றோ, நகைகள் பாலீஸ் செய்து தருவது போலவோ, கொரியர் தபால் தருவது போலவோ வர வாய்ப்புள்ளதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். யாராவது சந்தேகப்படும்படி வந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கோ, அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 comments: