Thursday, February 19, 2015

On Thursday, February 19, 2015 by Unknown in ,    
சட்டதிருத்தம் செய்து ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுப்போம்: எச்.ராஜா பேட்டி
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னையில்  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

                    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருவது வழக்கம். இது உணர்வுப் பூர்வமான விஷயம். மகாபாரதம், காலத்தில் எருதுகட்டு நடந்துள்ளது. ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டல்ல, நாட்டின் கலாச்சார அம்சம்.
2007–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விவாதத்தில் தமிழக அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசின் தவறான கொள்கையால் இந்த நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஜல்லிகட்டு போட்டி, மாட்டு வண்டி பந்தயம் போன்றவை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா சென்னை வந்த போது பொது மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கடந்த மாதம் 13–ந்தேதி பாராளுமன்றத்தில் அனைத்து எம்.பி.களுக்கும் நான் கடிதம் எழுதினேன். இதற்கு பல எம்.பி.க்கள் ஆதரவு தந்து இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து காட்சிப் பொருள் பட்டியலில் இருந்து எருதுவின் பெயரை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட திருத்தம் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கவர்னர் உரை மத்திய அரசுக்கு விடும் கோரிக்கை உரையாக உள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் திராவிட இயக்கங்களின் ஆட்சியால் மிகவும் சரிவை சந்தித்து வருகிறோம். அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் ரூ.4 லட்சம் கோடி கடனில் உள்ளன.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்றுள்ளது. 4–வது நாளில் தனது பல கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாத நிலையை அக்கட்சி தெரிந்து கொண்டது.
இது அங்குள்ள மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஸ்ரீரங்கம் இடைதேர்தல் வெற்றி அதிகாரிகளுக்கு கிடைத்த வெற்றி.
பா.ம.க. முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாசை அறிவித்துள்ளது. இது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இதற்கு கட்சி மேலிடம் தகுந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: