Thursday, February 19, 2015
கோவை கவுண்டம் பாளையம் அருகேயுள்ள இடையர்பாளையம் காந்தி நகர் பூர்ணிமா
வீதியில் வசித்து வந்தவர் முத்துப்பழனி (வயது 55). சம்பவத்தன்று இவர் அதே
பகுதியை சேர்ந்த 8 வயது மற்றும் 12 வயது 2 சிறுமிகளை அழைத்து சென்று
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதில் மயங்கிய அந்த
சிறுமிகளை முத்துப்பழனி பாலியல் பலாத்காரம் செய்தார்.
மயங்கி கிடந்த சிறுமிகளை அங்கேயே விட்டுவிட்டு முத்துப்பழனி சென்று விட்டார். வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பிய சிறுமிகளின் பெற்றோர் தங்கள் மகள்கள் அலங்கோலமாக மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சிறுமிகளை மயக்க நிலையில் இருந்து மீட்டு விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் முத்துப்பழனியை தேடி அவர் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சென்றனர். அதற்குள் விவரமறிந்து முத்துப்பழனி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தினார்.
அப்போது புரோட்டா மாஸ்டர் முத்துப்பழனிக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பொட்டப்பட்டி என்பது தெரியவந்தது. அவருக்கு முதல் திருமணம் நடைபெற்று அந்த மனைவி பிரிந்து சென்றதால் வேறு ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு கோவை இடையர் பாளையம் பகுதிக்கு வந்து தங்கி குடும்பம் நடத்தினார்.
இவரது தொல்லை தாங்காமல் அந்த பெண்ணும் முத்துப்பழனியை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
அவர் மதுரைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். எனவே அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.இந்நிலையில் திடீர் திருப்பமாக முத்துப்பழனி தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொட்டப்பட்டிக்கு வந்த அவர் நேற்று மாலை அங்குள்ள ஓட்டல் முன்பு விஷம் குடித்து பிணமாக கிடந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பாலியல் புகாரில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து முத்துப்பழனி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
0 comments:
Post a Comment