Thursday, February 05, 2015

On Thursday, February 05, 2015 by Unknown in ,    
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திடம் நித்யானந்தா மீது விவசாயி புகார்துரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். 6–வது கட்ட விசாரணையின் இறுதி நாளான இன்று, தனது முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையைச் சேர்ந்த நாராயணப்பா என்ற விவசாயி, சகாயத்திடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
ஓசூர் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பிலான களிமண் மற்றும் மணல் திருட்டுகள் நடந்துள்ளது. இது தொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நித்யானந்தா தூண்டுதலின் பேரில் சிலர் என்னை கொலை செய்வதற்காக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுள்ளார்கள்.
இந்த நிலையில் ஓசூர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி சொத்துக்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மதுரை மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நீங்கள் (சகாயம்) ஓசூருக்கு வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் ஐகோர்ட்டில் உள்ள நீதி தேவதை சிலை முன்பு அடுத்த மாதம் 3–ந்தேதி தீக்குளிப்பேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 comments: