Tuesday, February 17, 2015
ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி ஒன்றிய குழுகூட்டம்
அவினாசி ஊராட்சி ஒன்றிய குழுகூட்டம் கூட்டஅரங்கில் தலைவர் பத்மநந்தினி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் சிவகாமி, ஆணையாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது,
சிவகுமார் என்ற கண்ணப்பன் (19–வது வார்டு): தெக்கலூரில் போக்குவரத்து நெறிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரகணக்கான பொதுமக்கள் தெக்கலூரில் இருந்து அவினாசி, திருப்பூர், கோவை, கருமத்தம்பட்டி ஆகிய ஊர்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். ஆனால் தெக்கலூரில் பஸ்நிலையம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே தெக்கலூரில் கட்டாயம் பஸ்நிலையம் அமைக்க வேண்டும். மேலும் தெக்கலூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. 3–வது குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் நகரில் தார்சாலை அமைக்க வேண்டும்.
குடிநீர் வசதி
விஜயராகவன் (18–வது வார்டு): கருவலூர் அரசுபள்ளியில் 900–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் குடிநீர் வசதி கிடையாது. மாணவர்கள் குடிநீருக்காக எந்த நேரமும் அவினாசி–மேட்டுபாளையம் பிராதன சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. பள்ளியின் அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையும் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே வரும் வாகனங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. பள்ளி வளாகத்திற்குள் குடிநீர் வசதி செய்ய வேண்டும். கருவலூரில் இருந்து அன்றாடம் 500–க்கும் மேற்பட்டவர்கள் வெளியூர் சென்று வருகின்றனர். நெருக்கடி மிகுந்த குறுகலான ரோட்டில் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே கருவலூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால்: அங்கு பஸ் நிலையம் அமைக்க இடம் வேண்டும் என்றார். அறநிலையத்துறைக்கு சொந்தமான 4½ ஏக்கர் நிலம் உள்ளது. அவர்களிடம் அரசு மூலம் பெற்று அங்கு பஸ்நிலையம் அமைக்கலாம் என்று கவுன்சிலர் கூறினார்.
ராஜேஷ்வரி (13–வது வார்டு): துலுக்கமுத்தூர், குப்பாண்டம் பாளையம், அய்யம் பாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் பவானி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஆயிகவுண்டம் பாளையம் நடுநிலைபள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க வேண்டும். ஏ.டி.காலனி முதல் மகாராஜா கல்லூரி வரை தார்சாலை அமைக்க வேண்டும் என்றார்.
சிறப்பு நிதி ஒதுக்கீடு
கண்ணமாள் (5–வது வார்டு): பிச்சாண்டம் பாளையம் ஏ.டி.காலனிக்கு பெரிய ஓலப்பாளையம் வழியாக சின்ன ஓலப்பாளையம் வரை தார்சாலை மற்றும் வடுகபாளையம் ஊராட்சி முத்தரையர் காலனி முதல் சுடுகாடு வரை வடிகால் அமைக்க வேண்டும்.
சக்திவேல் (8–வது வார்டு): அவினாசி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் சிறப்புநிதி ஒதுக்கீடு செய்து அனைத்து கிராமங்களிலும் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். ஆதார் அட்டை குளறுபடியால் முறையாக பதிவு செய்தும் சிலிண்டர் மற்றும் மானியத் தொகை சரிவர பொதுமக்களுக்குகிடைக்கவில்லை. கடந்த ஆண்டு விடப்பட்ட டெண்டர் வேலை இன்னும் முடியவில்லை.
நடராஜ் (16–வது வார்டு): கவுண்டம் பாளையத்தில் அங்கன்வாடி பள்ளி அமைக்க வேண்டும். வெங்கமேடு, புதுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். நல்லகவுண்டம் பாளையம் புதூர் கருணாம்பிகை நகர் பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.
தலைவர் பத்மநந்தினி: ஒவ்வொரு கூட்டத்திற்கும் அனைத்து கவுன்சிலர்களும் தவறாது கலந்து வேண்டும். உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால்: அவினாசி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் மின்வாரிய கட்டணம், குடிநீர் கட்டணம் என ரூ.3½ கோடி நிலுவையில் உள்ளது. இந்த தொகையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகராட்சி 2–வது மண்டலத்துக்கு உட்பட்ட 16–வது வார்டு முதல் 30–வது வார்டு வரை உள்ள 15 வார்டுகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் ...
-
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). இவருடைய மனைவி தமிழரசி. இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தி...
-
திருச்சி அயன் ஸ்டீல் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் சார்பாக கடலூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள அத...
-
திருச்சி திருச்சியில் 10315,10409 நம்பர்கள் உடைய மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கூறுகைய...
-
சேலம் அருகே ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவி சில்மிஷம் செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவி கர்நாடக மாநிலம...
-
நங்கவரம் பண்ணை சார்பாக கலவை உரக்கிடங்கிற்கு 1 ஏக்கர் நிலம் நன்கொடை ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment