Saturday, February 28, 2015

On Saturday, February 28, 2015 by Unknown in ,    
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, பொது சுகாதாரத் துறை (புள்ளியல்) உதவி இயக்குநர் ஹரீம் தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம், துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் வரவேற்றார்.
முகாமில், மருத்துவர்கள் மனோஜ்பாண்டியன், மோனிகா, சுகன்யாஸ்ரீ ஆகியோர் 432 கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனையையும், சிகிச்சையையும் அளித்தனர்.
முகாமை தொடக்கிவைத்து எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. பேசியது: மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 670 சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்கள் 3 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்த முகாமில், கர்ப்பிணிகளுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படும், முழு ஆய்வகப் பரிசோதனை செய்யப்படும்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிய ஸ்கேன் செய்யப்படும். கர்ப்பிணிகளின் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து அடையாள எண் (பிக்மி நம்பர்) வழங்கப்படும். மேலும், பேறுகால பராமரிப்பு பற்றிய தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார்.
இதில், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments: